ஹாக்கி போட்டியில் விஸ்டம் கேட்ஸ் பள்ளி மாணவிகள் வெற்றி

ஓமலூர், ஆக.11:  ஓமலூர் அருகே வெள்ளார் அரசு மேல்நிலைப்பள்ளியில், பள்ளிகளுக்கு இடையிலான பெண்கள் கலந்து கொள்ளும் மேல்மூத்தோர் ஹாக்கி போட்டி நடந்தது. இதில், 10க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த மாணவிகள் கலந்து கொண்டனர். இதில், ஓமலூர் விஸ்டம் கேட்ஸ் மெட்ரிக் பள்ளி வீராங்கனைகளும், ராகவேந்திரா மெட்ரிக் பள்ளி வீராங்கனைகளும் இறுதி போட்டியில் மோதினர். இதில், ஓமலூர் விஸ்டம் கேட்ஸ் பள்ளி அணி வீராங்கனைகள், முதலிடம் பிடித்தனர். இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், விஸ்டம் கேட்ஸ் மெட்ரிக் பள்ளி பெண்கள் ஹாக்கி அணி, மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இதேபோல் மண்டல அளவிலான சதுரங்க போட்டியில், மாணவன் பிரகாசம் 14 வயதிற்குட்பட்டோர் பிரிவில் முதலிடம் பிடித்து வெற்றி பெற்றுள்ளார். கபடி போட்டியில் மேல் மூத்தோர் பிரிவில் 2ம் இடத்தை பிடித்துள்ளனர். ஜூனியர் பேட்மிட்டன் தனிநபர் போட்டியில், பள்ளி மாணவி மலர்விழி முதலிடம் பிடித்து வெற்றிபெற்று மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகத்தின் சார்பில், பாராட்டு விழா நடந்தது. இதில், பள்ளி தாளாளர் கோகிலவாணி ரவிக்குமார், முதல்வர் ரித்திகா, விளையாட்டு ஆசிரியர்கள் சரத், அருண் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: