×

குமரியில் மீன் தொழிலாளர்கள் 14ம் தேதி தர்ணா

நாகர்கோவில், ஆக.11 : குமரி மாவட்ட மீன்  தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், நாகர்கோவில் மீனாட்சிபுரத்தில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் அலெக்சாண்டர் தலைமை வகித்தார். கூட்டமைப்பு மாநில தலைவர் வக்கீல் ஜெலஸ்டின், மாவட்ட பொது செயலாளர் எஸ். அந்ேதாணி, மாவட்ட பொருளாளர் டிக்கார் தூஸ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.  கூட்டத்தில், மத்திய மோடி அரசு, 2018 டிசம்பர் 28ல் கடலோர மேலாண்மை ஒழுங்காற்று விதிமுறைகளுக்கான மசோதாவை, ஆன்லைன் வழியாக பதிவிறக்கம் செய்து, 30 நாட்களுக்குள் கருத்து கேட்பு என்ற நாடகத்தை நடத்தி முடித்து, மீனவர்களுக்கும், விவசாயிகளுக்கும், பொது மக்களுக்கும் விரோதமான அறிவிப்பாணை வெளியிட்டு உள்ளதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. கடலோரங்களை மொத்தமாக கபளீகரம் செய்ய மத்திய அரசு திட்டமிடுகிறது. கடலோர பகுதிகளில் பொதுமக்களை முற்றிலும் அப்புறப்படுத்தி விட்டு, சுற்றுலா திட்டங்களுக்கும், பெரும் கட்டுமான திட்டங்களுக்கும் அனுமதி வழங்கும் உள் நோக்கத்தின், முன் முயற்சியாகவே இந்த அறிவிப்பாணை உள்ளது. இந்த அறிவிப்பாணை படி, காலியாகும் கடலோர பகுதிகளில் உல்லாச விடுதிகள், தங்கும் விடுதிகள், தற்காலிக சுற்றுலா விடுதிகள் அமைக்க தங்கு தடையின்றி அனுமதி வழங்கப்படும். இந்த மசோதாவில் தேச பாதுகாப்பு, மீனவ மக்களுக்கு வாழ்விடமாக வழங்கப்பட்டு இருந்த பாதுகாப்புகள் அனைத்தும் நீக்கப்பட்டு உள்ளது.  

இதன் பிரதிபலிப்புகளே கன்னியாகுமரி, கோவளம், மணக்குடி, வடக்கு தாமரைக்குளம் பன்னாட்டு சரக்கு பெட்டக மாற்று முனையம் மற்றும் பழவேற்காடு கடலில் தனியார் துறைமுகம் என கடற்கரையை தனியார் கம்பெனிகளுக்கு தாரை வார்க்கும் திட்டம் ஆகும்.
எனவே 2018 கடலோர மண்டல ஒழுங்காற்று அறிவிப்பாணையை முற்றிலும் ரத்து செய்து, 1991 ல் கொண்டு வரப்பட்ட ஒழுங்காற்ற விதிமுறைகளின் அடிப்படையில் தேசம் முழுவதும் உள்ள மீனவ மக்களின் பிரதிநிதிகள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கருத்துக்களின் அடிப்படையில் ஒரு ஒருங்கிணைந்த கடலோர மக்கள் மற்றும் வாழ்வாதார, சூழியல் பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும். இதை வலியுறுத்தி, நாடு முழுவதும் மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் குரல் கொடுக்கவும், இதன் ஒரு பகுதியாக வருகிற 14ம்தேதி (புதன்) கன்னியாகுமரியில் மீனவர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் பங்கேற்கும் தர்ணா போராட்டம் அன்று மாலை 3 மணி முதல் இரவு 7 மணி வரை சுமார் 4 மணி நேரம் நடத்துவது என்றும், குமரி மாவட்ட மீன் தொழிலாளர்கள் சங்கம் நடத்தும் இந்த போராட்டத்தில் மீனவர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட குரல் கொடுக்க வேண்டும் எனவும் கேட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.எஸ்.டி.பி.ஐ. நிர்வாகிகள் 74 பேர் மீது வழக்கு
நாகர்கோவில், ஆக.11 : காஷ்மீர் சுயாட்சி பிரிவு ரத்து உள்ளிட்ட மத்திய அரசின் மக்கள் விரோத சட்டங்களை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. சார்பில் நாகர்கோவில் தலைமை தபால் நிலையம் முன் ஆகஸ்ட் 9ம்தேதி, முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி நேற்று முன்தினம் மாலையில், தலைமை தபால் நிலையம் முன் முற்றுகை போராட்டத்துக்காக, அந்த கட்சியை சேர்ந்தவர்கள் பெருமளவில் திரண்டனர். பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. போலீஸ் தடையை மீறி போராட்டம் நடந்தது. மாவட்ட துணைத்தலைவர் ஜாஹிர் ஹூசைன் தலைமை வகித்தார். எஸ்டிபிஐ மாநில செயற்குழு உறுப்பினர் சுல்பிக்கர் அலி, மாவட்ட தலைவர் காஜாமைதீன், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாவட்ட தலைவர் மாஹீன் அபூபக்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 74 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் இரவில் விடுவிக்கப்பட்டனர். தற்போது இந்த சம்பவத்தில் போலீஸ் தடையை மீறி போராட்டம் நடத்தி, பொதுமக்கள் மற்றும் போக்குவரத்து இடையூறு ஏற்படுத்தியதாக, வடசேரி இன்ஸ்பெக்டர் பெர்னார்டு சேவியர் புகாரின் பேரில் எஸ்டிபிஐ நிர்வாகிகள் உள்பட 74 பேர் மீதும், வடசேரி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Tags :
× RELATED கொரோனா அச்சுறுத்தல் கலெக்டர் அலுவலகத்தில் கை கழுவ தனி அறை