அனைத்துதுறை அதிகாரிகளும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்த வேண்டும்

புதுச்சேரி, ஆக. 11:  புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி, வாட்ஸ்அப்பில் நேற்று ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:காவல் தலைமை அலுவலகத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட இருப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இதுபோன்ற தலைமை பதவிகளிடம் இதுவே எதிர்பார்க்கப்படுகிறது. இதுதான் உண்மையான வழியும்கூட. இந்த வழி புதுச்சேரியை பாதுகாக்கும். புதுச்சேரியை செழிப்பானதாக மாற்றும். காவல்துறை சேவை செய்வதற்கான வழி. சட்ட விதிகளை உறுதி செய்வதற்கான வழி. நீதியை உறுதி செய்வதற்கான வழி. தரவரிசையில் நலன்கள் மற்றும் கோப்புகள் உறுதி செய்யப்படும். ஒருவரின் நிலை மற்றும் சலுகைகளுக்கு நீதி வழங்குவதற்கான வழி. உண்மையான ஆர்வத்துடன் சேவை செய்வதற்கான வழி. இது அனைத்து துறைகளுக்கும் ஒரு எடுத்துக்காட்டு. புதுச்சேரியில் குற்றங்களை தடுக்கும் எந்த ஒரு விஷயத்தையும் டிஜிபியிடம் மக்கள் தெரிவிக்க வேண்டும்.

Advertising
Advertising

முன் அனுமதியின்றி மக்களை சந்திக்கக்கூடிய அதிகாரிகள், மக்களுக்கு பாதுகாப்பு உணர்வை அளிக்கின்றனர். பிரச்னை ஏற்பட்டால் மூத்த அதிகாரியை சந்திக்கலாம் என்று மக்கள் தெரிந்து கொள்கின்றனர். இது பிரச்னைகள் உருவாக்குவதை தடுக்கிறது. நில அபகரிப்பு, திட்டமிட்டு செய்யப்படும் குற்றம், வீட்டு வன்முறை, ஊழல் உள்ளிட்ட அனைத்து குற்றங்களையும் தடுக்கிறது. இதுபோல் அனைத்து துறை அதிகாரிகளும்  மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: