கூரியர் பார்சல் பையை திருடிய சென்னை வாலிபர் கைது

புதுச்சேரி, ஆக. 11: புதுச்சேரி லாஸ்பேட்டை குறிஞ்சி நகர் கற்பக வினாயகர் கோயில் தெருவை சேர்ந்தவர் மூர்த்தி (34). தனியார் கூரியர் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் இவர், தட்டாஞ்சாவடி விவிபி நகரில் உள்ள 2வது மடியில் ஒரு  வீட்டிற்கு கூரியர் பார்சலை கடந்த ஜூன் 22ம் தேதி கொடுக்க சென்றார். அப்போது    தனது பைக்கில் வைத்திருந்த பார்சல் பையை யாரோ திருடி சென்றுவிட்டனர். அந்த பையில் செல்போன்கள் உள்பட ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் இருந்தது. இதுகுறித்து மூர்த்தி கோரிமேடு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் ஆகியோர் வழக்கு பதிந்து விசாரணை  நடத்தினர். இந்நிலையில் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது கூரியர் பையை 2 பேர் எடுத்து சென்றது பதிவாகியிருந்தது. அந்த பதிவை வைத்து விசாரித்ததில்,  அவர்கள் சென்னையை சேர்ந்தவர் என தெரியவந்தது.

Advertising
Advertising

இந்நிலையில் போலீசார் நேற்று முன்தினம் கோரிமேடு எல்லையில் தீவிர வாகன சோதனை நடத்தினர். அப்போது பைக்கில் வந்த சென்னை  தாழம்பூ மாதா கோயில் தெருவை சேர்ந்த ராஜசேகர் (26) என்பவர் மடக்கி விசாரித்ததில் அவர் நண்பன் பாண்டியனுடன் சேர்ந்து கூரியர் பேக் திருடியது தெரியவந்தது. இதையடுத்து ராஜசேகரை கைது செய்து ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள 6 செல்போன்கள், கூரியர் பேக், பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.  பின்னர் அவரை மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள  பாண்டியனை   தேடி வருகின்றனர்.

Related Stories: