விவசாயியை தாக்கிய வாலிபர் கைது

திருக்கோவிலூர், ஆக. 11:திருக்கோவிலூர் அருகே விவசாயியை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். திருக்கோவிலூர் அருகே மேல்தொட்டி கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் மகன் நந்தகோபால் (55). இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் அவரது சகோதரர் கோவிந்தசாமி (57) என்பவருக்கும் பொது கிணற்றில் தண்ணீர் இறைப்பதில் பிரச்னை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் நந்தகோபால் தனது வீட்டின் அருகே நின்றிருந்த போது, கோவிந்தசாமி மற்றும் அவரது உறவினர் முருகன் மகன் மோகன்ராஜ் (21) ஆகிய 2 பேரும் சேர்ந்து நந்தகோபாலை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.இதுகுறித்து நந்தகோபால் திருக்கோவிலூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜராமச்சந்திரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து மோகன்ராஜை கைது செய்தனர்.

Advertising
Advertising

Related Stories: