பொது விநியோக திட்ட குறைதீர்க்கும் முகாம்

திருவையாறு, ஆக.11: திருவையாறு அந்தணர்குறிச்சியில் செயல்பட்டு வரும் நியாயவிலை கடை 3ல் பொது விநியோகத்திட்டத்தின்கீழ் நுகர்வோர் குறை தீர்க்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு குடிமைப்பொருள் வழங்கல் தனி வட்டாட்சியர் கலைச்செல்வி தலைமை வகித்தார். முகாமில் பொதுமக்களிடமிருந்து 9 மனுக்கள் பெறப்பட்டது. அதில் ரேஷன்கார்டில் பெயர் சேர்த்தல், 3, பெயர் நீக்கம் 3 மனுக்களாகும், முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Advertising
Advertising

Related Stories: