சேதுபாவாசத்திரம் வட்டாரத்தில் ஊராட்சி குளங்கள் தூர்வாரும் பணி

சேதுபாவாசத்திரம், ஆக.11: தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி குளங்களில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூர்வாரும் பணி துவங்கியது.தமிழக அரசு குடிமராமத்து திட்டத்தின்கீழ் ஊராட்சி குளங்களை தூர்வார நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளது. இதன்படி சேதுபாவாசத்திரம் வட்டாரத்தில் உள்ள 94 ஊராட்சி குளங்களுக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் 94 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாசனதாரர் சங்கம் அமைக்கப்பட்டு நேற்றுமுன்தினம் நாடியம் ராமகுரு குட்டைக்குளம், பள்ளத்தூர் மண்ணடிக்குட்டை, சொக்கநாதபுரம் தாமரைக்குளம் ஆகியவற்றில் தூர்வாரும் பணியை எம்எல்ஏ கோவிந்தராசு துவக்கி வைத்தார். நிகழ்சியில் சேதுபாவாசத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கோவிந்தராசு, கிருஷ்ணமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Advertising
Advertising

Related Stories: