19 தாசில்தார்கள் கூண்டோடு இடமாற்றம் திருச்சி கலெக்டர் அதிரடி உத்தரவு

திருச்சி, ஆக.8: திருச்சி மாவட்டத்தில் 19 தாசில்தார்களை இடம் மாற்றம் செய்து கலெக்டர் சிவராசு நேற்று அதிரடியாக உத்தரவு பிறப்பித்தார்.

மணப்பாறை தாசில்தார் சித்ரா திருச்சி மேற்கு தாசில்தாராகவும், திருச்சி விமான நிலைய விரிவாக்க தனி தாசில்தார் (நிலம் எடுப்பு) ஞானாமிர்தம் மணப்பாறை தாசில்தாராகவும், திருச்சி தாசில்தார் (மருத்துவ விடுப்பு முடிந்து) கருணாகரன் காலியாக உள்ள துறையூர் சமூக பாதுகாப்பு திட்டம் தனி தாசில்தாராகவும், திருச்சி கனிமம் மற்றும் சுரங்கம் தாசில்தார் (தனி) திருச்சி கலெக்டர் அலுவலக (குற்றவியல்) மேலாளராகவும், மருங்காபுரி சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் (தனி) வாசுதேவன் திருச்சி கனிமம் மற்றும் சுரங்கம் தாசில்தாராகவும் (தனி), மணப்பாறை சிப்காட் தொழில் பூங்கா தாசில்தார் நிலம் எடுப்பு அலகு-3 (தனி) சாந்தகுமார் மருங்காபுரி சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராகவும் (தனி) மாற்றப்பட்டுள்ளனர்.
Advertising
Advertising

ரங்கம் முத்திரை கட்டணம் தனி தாசில்தார் ரவி, திருச்சி விமான நிலையம் விரிவாக்கம் தனி தாசில்தாராகவும், திருச்சி கிழக்கு (உ.பொ.வ) தனி தாசில்தார் சாந்தி ரங்கம் முத்திரைக்கட்டண தனி தாசில்தாராகவும், பொன்மலை அலகு நகர நிலவரித்திட்ட தனி தாசில்தார் சந்திரகுமார், தொட்டியம் தனி தாசில்தாராகவும் (ச.பா.தி), தொட்டியம் (ச.பா.தி) தனி தாசில்தார் ரவிசங்கர் பொன்மலை அலகு நகர நிலவரித்திட்ட தனிதாசில்தாராகவும், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலக பறக்கும்படை தனிதாசில்தார் மணிகண்டன் திருச்சி முத்திரைக்கட்டணம் தனி தாசில்தாராகவும், திருச்சி முத்திரைக்கட்டணம் தனி தாசில்தார் ராமசாமி திருச்சி மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகம் (பறக்கும்படை) தனி தாசில்தாராக நியமித்து மாற்றுப்பணியில் திருச்சி கலெக்டர் முகாம் உதவியாளராகவும், திருச்சி மேற்கு தாசில்தார் ராஜவேல் திருச்சி-காரைக்குடி பிரிவு தேசிய நெடுஞ்சாலை தனி தாசில்தாராகவும் (நிலம் எடுப்பு), திருச்சி-காரைக்குடி தேசிய நெடுஞ்சாலை தனி தாசில்தார் (நி.எ) சுமதி திருச்சி கிழக்கு (உ.பொ.வ) தனி தாசில்தாராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மணப்பாறை தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனம் தனி தாசில்தார் (நி.எ) அலகு-1 ரேணுகா திருச்சி உதவி ஆணையர் (கலால்) அலுவலகம் மேலாளராகவும், திருச்சி உதவி ஆணையர் (கலால்) அலுவலக மேலாளர் அருள்ஜோதி மண்ணச்சநல்லூர் (ச.பா.தி) தனி தாசில்தாராகவும், திருச்சி கலெக்டர் அலுவலக கூடுதல் வரவேற்பு தாசில்தார் கலைவாணி திருவெறும்பூர் (ச.பா.தி) தனி தாசில்தாராகவும், திருவெறும்பூர் (ச.பா.தி) தனி தாசில்தார் அகிலா திருச்சி கலெக்டர் அலுவலக கூடுதல் வரவேற்பு தாசில்தாராகவும், மண்ணச்சநல்லூர் தனி தாசில்தார் சாந்தி திருச்சி மேற்கு (உ.பொ.வ) தனி தாசில்தாராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது வழக்கமான நடைமுறை இடமாற்றம் தான் என வருவாய்துறையினர் தெரிவித்தனர்.

Related Stories: