மழைநீரை சேகரிக்கும் வகையில் குளத்தை தூர்வாரிய சிஐஎஸ்எப் வீரர்கள்

திருச்சி, ஆக. 8: திருச்சி அருகே உள்ள குளத்தை சிஐஎஸ்எப் வீரர்கள் தூர்வாரினர். தமிழகத்தில் போதிய மழை இல்லாததாலும் நிலத்தடி நீர் வற்றிய காரணத்தினாலும் குடிநீருக்கு கடும் பஞ்சம் ஏற்பட்டது. இதையடுத்து அனைத்து குளங்களும், ஏரிகளிலும் மழை நீரை சேகரிக்கும் வகையில் தன்னார்வ ெதாண்டு நிறுவனத்தினர் மற்றும் மத்திய அரசின் ஜல்சக்தி அபியான் திட்டம் மூலம் குளங்கள், ஏரிகள் தூர்வாரப்பட்டு வருகிறது.

Advertising
Advertising

இதில் திருச்சி விமான நிலையத்தில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை (சிஐஎஸ்எப்) வீரர்கள் நேற்று திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியம் பாகனூர் ஊராட்சியில் உள்ள வெள்ளையன்குட்டையை தூர்வாரும் பணியை துவக்கினர். இந்த தூர்வாரும் பணியை மத்திய தொழிற் பாதுகாப்பு படை திருச்சி துணை கமாண்டட் சந்தோஷ்குமார் தலைமையில் சுமார் 50க்கும் மேற்பட்ட வீரர்கள் மேற்கொண்டனர். இந்த தூர்வாரும் பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என அதிகாரிகள் கூறினர்.

Related Stories: