கருணாநிதி முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு

முசிறி, ஆக.8: முசிறி, தா.பேட்டையில் திமுக சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

முசிறி கைகாட்டியில் நடைபெற்ற நினைவஞ்சலி நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். நகர செயலாளர் சிவகுமார் முன்னிலை வகித்தார். அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவப்படத்திற்கு நிர்வாகிகள், தொண்டர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதேபோல் தா.பேட்டை கடைவீதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நகர திமுக செயலாளர் தங்கராசு தலைமை வகித்தார். கருணாநிதியின் உருவப்படத்திற்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
Advertising
Advertising

லால்குடி: லால்குடியில் திமுக ஒன்றியம், நகரம் சார்பில் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் நகர செயலாளர் துரைமாணிக்கம் முன்னிலையில் கருணாநிதி உருவப்படத்திற்கு கட்சியினர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். அவைத்தலைவர் கிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: