ரயிலில் அடிபட்டு ரயில்வே ஊழியர் பலி

மண்ணச்சநல்லூர், ஆக.8: மண்ணச்சநல்லூர் அருகே உள்ள பிச்சாண்டார்கோவில் ஊராட்சி பீரங்கிமேட்டை சேர்ந்தவர் பிச்சை மகன் கார்த்திக்கேயன்(32), ரயில்வேயில் லைன் மேனாக வேலைப்பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று கூத்தூர் பகுதியில் உள்ள ரயில்வே பாதையில் பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது கால் தண்டவாளத்தில் சிக்கிக்கொண்டது. அப்போது அந்த வழியாக வந்த வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிபட்டு கார்த்திகேயன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: