துறையூர் அருகே பட்டப்பகலில் 2 வீடுகளில் நகை, ரூ.11 ஆயிரம் திருட்டு

துறையூர், ஆக.8: துறையூர் அருகே 100 நாள் பணிக்கு சென்ற தம்பதி வீடு மற்றும் மற்றொரு பெண் தொழிலாளி வீட்டில் நேற்று பட்டப்பகலில் மர்மநபர்கள் நுழைந்து நகைகள், பணத்தை திருடிச்சென்றனர். துறையூர் அருகே எரகுடியை சேர்ந்தவர் மணி(57). இவரும், இவருடைய மனைவி செல்வி(57) ஆகிய இருவரும் 100 நாள் வேலைக்கு நேற்று சென்றனர். பணி முடித்து விட்டு வீட்டுக்கு திரும்பினர். வீட்டுக்குள்ளிருந்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 5 சவரன் தோடு, செயின் உள்ளிட்ட தங்க நகைகளும், ரூ.11 ஆயிரம் ரொக்கத்தையும் திருடிய நபர்கள் வீட்டைத் திறந்து உள்ளே நுழைந்தது தெரியாதபடிக்கு வீட்டுக்கதவுகளை பூட்டிச் சென்றனர்.

Advertising
Advertising

இதே போல் எரகுடி அருகேயுள்ள வடக்கிப்பட்டி பஜனை மடத்தெருவைச் சேர்ந்தவர் ராமதாஸ்(60). இவர் தனது மனைவி கனகஜோதியை எரகுடி அழைத்து சென்று நூறு நாள் பணியில் விட்டார். பின்னர் மனைவியை அழைத்துச் செல்வதற்காக எரகுடி பகுதி கடைவீதியில் இருந்தார். இந்நிலையில் வீட்டுக்கு சென்று ராமதாஸின் மகன் தெய்வநாயகம் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் வீட்டைத் திறந்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த மூன்றேகால் சவரன் நகைகளையம், வெள்ளியிலான 2 அர்ணா கயிறுகளையும் திருடிச் சென்றிருப்பதை அறிந்தார். பட்டப் பகலில் எரகுடி ஊராட்சிக்குள் 2 வீடுகளில் நடந்த திருட்டு குறித்து மணியும், ராமதாசும் தனித்தனியாக கொடுத்த புகாரின் பேரில் உப்பிலியபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: