வீட்டு வாசலில் தூங்கிய கர்ப்பிணியிடம் 4 பவுன் செயின் பறிப்பு

மணப்பாறை, ஆக. 8: துவரங்குறிச்சியில காற்றுக்காக வீட்டு வாசலில் தூங்கிய கர்ப்பிணியிடம் 4 பவுன் செயினை மர்ம நபர்கள் பறித்துச்சென்றனர்.

துவரங்குறிச்சி அருகே அதிகாரம் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ். பெட்டிக்கடை வைத்துள்ளார். இவரது மனைவி ரஞ்சிதா. 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். சம்பவத்தன்று ரஞ்சிதா, சுரேஷ் காற்றுக்காக வீட்டு வாசலில் தூங்கினர். நள்ளிரவு அங்கு வந்த மர்ம நபர்கள் ரஞ்சிதாவின் கழுத்திலிருந்த 4 பவுன் தாலி செயினை பறித்தனர்.
Advertising
Advertising

அப்போது ரஞ்சிதா கூச்சலிட்டதால் மர்ம நபர்கள் செயினை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் துவரங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து செயினை பறித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Related Stories: