பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருச்சி, ஆக.8: திருச்சி மாவட்ட சிஐடியூ கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் நேற்று தமிழகம் முழுவதும் பேரணி நடத்தி தொழிலாளர் நலவாரிய அலுவலகங்கள் முன் முற்றுகையிடப்போவதாக அறிவித்திருந்தனர். இந்த பேரணி, முற்றுகைக்கு போலீசார் அனுமதி மறுத்ததையொட்டி திருச்சி கல்லுக்குழி செங்குளம் காலனியில் உள்ள தொழிலாளர் நல அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியூ மாவட்ட தலைவர் ராமர் தலைமை வகித்தார். செயலாளர் ரங்கராஜன், பொருளாளர் ராஜேந்திரன், கட்டுமான சங்க மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், மணிகண்டன் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Advertising
Advertising

ஆர்ப்பாட்டத்தில், முறைசாரா நல சங்க உறுப்பினர்களுக்கு பணப்பயன்களை உடனடியாக வழங்க அரசு உரிய நிதியினை ஒதுக்க வேண்டும். கலெக்டர் தலைமையில் நடக்கும் நலவாரிய கண்காணிப்பு குழு கூட்டத்தை மாதம் தோறும் கூட்ட வேண்டும். பணப்பயன்களுக்கு விண்ணப்பித்த 3 மாதத்திற்குள் நிதியினை வழங்க வேண்டும். நலவாரியத்திற்கு தேவையான ஊழியர்களை நிரந்தரமாக நியமிக்க வேண்டும். அனைத்து நாட்களிலும் வாரியத்தில் தொழிலாளர்களின் மனுக்களை பதிவு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கோஷம் எழுப்பினர். இதில், 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Related Stories: