மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி

லால்குடி, ஆக.8: லால்குடியில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பிரசார பேரணியை தனியார் மேல்நிலைப்பள்ளியில் சப்இன்ஸ்பெக்டர் சதீஸ்குமார் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். பேரணியில் பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் பாலாஜி, அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் திலகநாதன் முன்னிலை வகித்தனர். பேரணியில் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு மழைநீர் சேகரிப்பது குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்கள் எழுப்பி சென்றனர். நிகழ்ச்சியில் லால்குடி பேரூராட்சி ஊழியர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் பலர் கலந்துகொண்டனர்.

Advertising
Advertising

Related Stories: