நவல்பட்டு அய்யனார் கோயிலில் ஆடித்திருவிழா

திருவெறும்பூர், ஆக.8: திருவெறும்பூர் அருகே தலைவெட்டி அய்யனார் கோயில் ஆடித்திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு கிராமத்தின் காவல் தெய்வமாக இருக்கும் தலைவெட்டி அய்யனார் கோயில் ஆடி திருவிழாவானது கடந்த 2ம் தேதி துவங்கியது. இதனைத் தொடர்ந்து 3ம் தேதி காவிரியிலிருந்து பக்தர்கள் தீர்த்த குடம், பால்குடம் எடுத்து வந்து அய்யனார் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்தனர்.

Advertising
Advertising

விழாவின் முக்கிய நிகழ்வான 4ம் தேதி ரெட்டமலை ஒண்டி கருப்புசாமிக்கும், ஆதிமாகாளி அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம், சந்தன காப்பு அலங்காரம் நடைபெற்றது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் அய்யனார் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும் மருளாளி அரிவாள் மீது ஏறி நின்று பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார். திருவிழாவில் கலந்துகொண்ட பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனுக்காக ஆடு, கோழிகளை காணிக்கையாக வழங்கி வழிபட்டனர்.

Related Stories: