விவசாயிகள் விதையின் தரத்தை பரிசோதனை செய்ய வேண்டும் வேளாண் அலுவலர்கள் அறிவுறுத்தல்

திருச்சி, ஆக.7: விவசாயிகள் விதையின் தரத்தை பரிசோதனை செய்ய வேண்டும் என்று வேளாண் அலுவலர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

திருச்சி மாவட்டத்தில் விவசாயிகள் நெல், சோளம், கம்பு, மக்காசோளம் பயறு வகைகள், பருத்தி, எண்ணெய்வித்து பயிர்கள் எள், கடலை, நெல், துவரை, அதிகம் சாகுபடி செய்து வருகின்றனர். விவசாயிகள் இரு மடங்கு விளைச்சல் பெற தரமான விதையை பயன்படுத்தினால் மட்டுமே நல்ல விளைச்சல் பெற முடியும். அதிக வேர்பிடிப்பு, பூச்சி, நோய் எதிர்ப்பு சக்திமிக்க தரமான விதைகளை விதைத்திட வேண்டும். விவசாயிகள் மாதிரி விதைகளை குறைந்தபட்சம், நெல் 50 கிராம், உளுந்து, பாசிப்பயிறு 100 கிராம், நிலக்கடலை, மக்காசோளம் 500 கிராம், எள், ராகி 25 கிராம் அளவில் எடுத்து வந்து தங்கள் முகவரியுடன், திருச்சி காஜாமலை விதை பாிசோதனை நிலையத்தில் நேரில் கொடுக்க வேண்டும்.
Advertising
Advertising

விதை பரிசோதனை நிலையத்தின் மூலம் விதையின் தரம், முளைப்புத்திறன், ஈரப்பதம், மற்றும் பிற ரக கலப்பு போன்றவற்றை தரம் பிாித்து விதையின் தரத்தை உறுதி செய்து கொள்ளலாம். மேலும் தரமற்ற விதைகள் இருந்தால் நிராகரிக்கப்படும். திருச்சி விதை பரிசோதனை நிலையத்தில் 800 விதை மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஒரு விதை மாதிரிக்கு ஆய்வு கட்டணமாக ரூ.30 மட்டுமே செலுத்த வேண்டும்.  எனவே விவசாயிகள், விதை விற்பனையாளர்கள், விதை மாதிரியை நேரடியாக விதை ஆய்வகத்தில் கொடுத்து விதை தரத்தை பரிசோதனை செய்ய வேண்டும். பின்னர் பாிசோதனை முடிவுகள் அவர்களுடைய முகவாிக்கு அனுப்பி வைக்கப்படும் என்று திருச்சி விதை பாிசோதனை அலுவலர் லீமாரோஸ், வேளாண் அலுவலர்கள் ராபர்ட் ாிச்சர்ட் மற்றும் சபாபதி ஆகியோர் தொிவித்துள்ளனர்.

Related Stories: