சுதந்திர தினத்தன்று 404 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

திருச்சி, ஆக.8: சுதந்திர தினத்தன்று (ஆக.15) திருச்சி மாவட்டத்தில் 404 கிராம ஊராட்சிகளில் நடக்கும் கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என திருச்சி கலெக்டர் சிவராசு கேட்டுககொண்டுள்ளார். கிராம ஊராட்சிகளின் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம் என்பதை கருத்தில் கொண்டு தமிழக அரசு நிர்வாகத்தில் இருந்த நடைமுறை சிக்கல்களை விலக்கி ஊராட்சி வளர்ச்சிப்பணிகளுக்காக தேவையான நிதி ஒதுக்கீடு அரசால் அவ்வப்போது அளிக்கப்படுகிறது.

Advertising
Advertising

சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆக.15ம் தேதி நடைபெற உள்ள கிராம சபை கூட்டத்தில், பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி தடை செய்தல், கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம், குடிநீர் சிக்கனமாக பயன்படுத்துதல், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், ஊராட்சி பகுதிகளில் நடக்கும் திட்டப்பணிகள், முன்னேற்றம் மற்றும் நிதி செலவின விபரங்கள், உணவு பொருள் வழங்குதல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு, முழு சுகாதார தமிழகம், முன்னோடி தமிழகம் திறந்தவெளி மலம் கழித்தல் அற்ற ஊராட்சிகள் மற்றும் ஜல்சக்தி இயக்கம் போன்ற விவரங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இக்கூட்டத்தில் அனைத்து பொதுமக்களும் கலந்துகொண்டு கிராமராஜ்யம் நடைபெறுவதை உறுதிப்படுத்த வேண்டும் என திருச்சி கலெக்டர் சிவராசு கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Stories: