மரம் வெட்டிய 3 பேர் மீது வழக்கு

திருபுவனை, ஆக. 8: திருபுவனை அடுத்த மதகடிப்பட்டு அங்காளம்மன் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் 10க்கும் மேற்பட்ட தென்னை, பூவரசு, பனைமரம், கொடுக்காபுளி உள்ளிட்ட பல்ேவறு மரங்கள் உள்ளன. இந்நிலையில் இங்குள்ள சில மரங்களை அதே பகுதியை சேர்ந்த சிவக்குமார், சரவணன், கார்த்திகேயன் ஆகியோர் வெட்டியுள்ளனர். இதுகுறித்து வனத்துறை துணை இயக்குனர் குமரவேல், திருபுவனை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார் சிவக்குமார், சரவணன், கார்த்திகேயன் ஆகிய 3 பேர் மீதும் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: