மத்திய அரசின் நடவடிக்கைக்கு முன்னாள் எம்பி வரவேற்பு

புதுச்சேரி, ஆக. 8:   ஜம்மு- காஷ்மீர் இந்தியாவோடு முழுமையாக இணைகின்ற முடிவை ஆதரிப்பதாக முன்னாள் எம்பி கண்ணன் தெரிவித்துள்ளார்.  இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: நாடாளுமன்றத்தில் ஜம்மு- காஷ்மீருக்கு சிறப்பு சலுகைகள் அளிக்கும் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டிருக்கிறது. இதன்  மூலம் காஷ்மீர் மாநிலம் இந்தியாவோடு முழுமையாக இணைகின்ற முடிவை நான் ஆதரிக்கிறேன். இதில் நடைமுறைகளை முழுமையாக நிறைவேற்றியிருந்தால், இன்னும் மகிழ்ச்சியாகவும் சிறப்பாகவும் இருக்கும். எப்படி ஆயினும் அனைத்து சமுதாய மக்களின் அமைதியான நல்வாழ்வுக்கு உதவும் மத்திய அரசின் இந்த முடிவை மனதார ஆதரிக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: