மண்ணாடிப்பட்டில் இன்று சப்-கலெக்டர் முகாம் அலுவலகம்

புதுச்சேரி, ஆக. 8: புதுவை வருவாய் அதிகாரி ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:வில்லியனூர் சப்-கலெக்டர் (தெற்கு) இன்று (8ம் தேதி) மண்ணாடி பட்டில் உள்ள சமுதாய கூடத்தில் முகாம் அலுவலகம் நடத்த திட்டமிட்டுள்ளார். இம்முகாமில் சான்றிதழ் வழங்குதல் போன்ற வருவாய்த்துறை சார்ந்த சேவைகளை மண்ணாடிப்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான செல்லிப்பட்டு, சோரப்பட்டு, வாதானூர், விநாயகம்பட்டு, மணலிப்பட்டு, கொடாத்தூர், கூனிச்சம்பட்டு பகுதிவாழ் மக்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.இந்த கிராமங்களில் உள்ள மக்களின் குறைதீர்க்கும் மனுக்கள் குறித்த விசாரணைகளையும், தீர்வுகள் மேற்கொள்ளவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. மேலும், அப்பகுதியை சேர்ந்த மக்களிடம் புதிய மனுக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டு கூடுமானவரையில் அம்முகாம் அலுவலகத்திலேயே தீர்வும் அளிக்கப்பட உள்ளது. முகாமில் தற்காலிக பொதுசேவை மையம், ஆதார் மையம், வாக்காளர் அடையாள அட்டை மற்றும் குடும்ப அட்டை சம்பந்தமான சேவைகளும் வழங்கப்பட உள்ளது. ஆகையால் மண்ணாடிப்பட்டு மற்றும் அதை சுற்றியுள்ள கிராம மக்கள் முழுமையாக பயனடையுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertising
Advertising

Related Stories: