வேலூரில் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

வேலூர்: தேசிய மருத்துவ ஆணைய உத்தரவை கண்டித்து வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மருத்துவ மாணவர்கள் முதுகலை பட்ட மேற்படிப்பிற்கு நெக்ஸ்ட் தேர்வை எழுதினால் மட்டுமே எம்டி, எம்எஸ் போன்ற முதுநிலை படிப்புகளில் சேர முடியும் என தேசிய மருத்துவ ஆணையம் ஆணை பிறப்பித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி, நேற்று வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், எம்பிபிஎஸ் மாணவர்கள் 100க்கும் மேற்பட்டவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் முதுகலை பட்ட மேற்படிப்பிற்கு நெக்ஸ்ட் தேர்வு கட்டாயமாக்குவதை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று கோரி ேகாஷங்களை எழுப்பினர்.

Related Stories: