×

திருவண்ணாமலை மாவட்டத்தில் 7.51 லட்சம் பேருக்கு இன்று குடற்புழு நீக்க மாத்திரை

திருவண்ணாமலை, ஆக. 8: திருவண்ணாமலை மாவட்டத்தில் 7.51 லட்சம் பேருக்கு இன்று குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட உள்ளது. இதுகுறித்து கலெக்டர் கே.எஸ். கந்தசாமி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இன்று(8ம் தேதி) தேசிய குடற்புழு நீக்க நாள் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி இன்று 1 வயது முதல் 19 வயது வரை உள்ள அனைவருக்கும் அல்பென்டசோல் மாத்திரை வழங்கப்படுகிறது. ஒரு வயது முதல் இரண்டு வயது வரை உள்ள குழந்தைகளுக்கு அரை மாத்திரை அல்லது 5 மில்லி அல்பென்டசோல் திரவமும், 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் முதல் பத்தொன்பது வயது வரை உள்ள நபர்களுக்கு ஒரு மாத்திரை அல்லது 10 மில்லி அல்பென்டசோல் திரவமும் வழங்கப்படுகிறது.

இம்மாத்திரைகள் அனைத்து அங்கன்வாடி ைமயங்கள், அனைத்து அரசு பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள் முன்னிலையில் நேரடியாக இன்று வழங்கப்படும். விடுபட்ட நபர்களுக்கு வரும் 16ம் தேதி வழங்கப்படும். இதன்மூலம் திருவண்ணாமலை மாவட்டத்தில் 7 லட்சத்து 51 ஆயிரத்து 2 குழந்தைகள் மற்றும் மாணவர்கள் பயன் அடைவார்கள்.

இம்மாத்திரையை சாப்பிடுவதால் குடற்புழு நீக்கம் செய்யப்படும். ரத்த சோகை நீங்கி நன்றாக உணவு உட்கொள்ளலாம். மாணவர்கள் உடல் ஆரோக்கியம் பெற்றுவிடுப்புகளின்றி பள்ளிக்கு வரவும் வாய்ப்பு ஏற்படும். எனவே இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி தேசிய குடற்புழு நீக்கநாளான இன்று 1 வயது முதல் 19 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகள் மற்றும் மாணவர்களும் அல்பென்டசோல் மாத்திரையை உட்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags :
× RELATED திமுக ஒன்றிய செயலாளர், அதிமுக மாவட்ட...