×

பேசின் பிரிட்ஜில் ரயில் பெட்டி தடம் புரண்டது

சென்னை, ஆக. 8: சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வரும் எக்ஸ்பிரஸ் ரயில்களி்ன் பழுதுகளை பேசின் பிரிட்ஜ் பணிமனையில் சரிபார்க்கப்படும். அதுபோல் நேற்று அதிகாலை 4 மணி அளவில் ஒரு ரயில்களில் பழுது சரிபார்க்க ஊழியர்கள் கொண்டு சென்றனர். அப்போது திடீரென ரயில் தண்டவாளத்தில் இறங்கியது. இதில் 2 ரயில் பெட்டிகள் தடம் புரண்டன. உடனடியாக இதுபற்றி தெரிந்த ஊழியர்கள் ரயிலை நிறுத்தி மேலும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுத்தனர். பின்னர் மூன்று மணி நேரம் போராடி சரி செய்தனர். இதன் பிறகு சென்ட்ரலில் இருந்து செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் புறநகர் ரயில்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டன. இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Tags :
× RELATED திருவள்ளூர் அருகே தீ விபத்தில் சவுக்கு தோப்பு எரிந்து நாசம்