×

பிரதம மந்திரி தேசிய விருதுக்கு குழந்தைகள் விண்ணப்பிக்கலாம்

அரியலூர், ஜூலை 26: மத்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுஅமைச்சகத்தின் மூலம் பிரதம மந்திரி தேசிய குழந்தைகள் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதி வாய்ந்த குழந்தைகள், தனிப்பட்ட நபர்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. புதிய கண்டுபிடிப்பு, கல்வி, விளையாட்டு, கலை மற்றும் பண்பாடு, சமூக சேவை போன்ற துறைகளில் வீரதீர செயல்புரிந்த தனி தகுதி படைத்த குழந்தைகளை அங்கீகரிக்கும் விதமாக பாலசக்திபுரஷ்கார் என்னும் குழந்தைகளுக்கான தேசிய விருது வழங்கப்படுகிறது. இவ்விருது ரூ.1 லட்சம் காசோலை, பதக்கம், சான்றிதழ் மற்றும் தகுதியுரை புத்தகம் ஆகியவற்றை கொண்டதாகும்.குழந்தைகள் மேம்பாடு, குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் குழந்தைகள் நலம் போன்ற துறைகளில் குழந்தைகளுக்கான சேவைகளில் தலைசிறந்த பங்களிப்பு செய்த தனிப்பட்ட நபர்கள் மற்றும் நிறுவனங்களை அங்கீகரிக்கும் விதமாக ‘பாலகல்யாண்புகார்’என்னும் தேசிய விருது வழங்கப்படுகிறது. தனிப்பட்ட நபர்களுக்கான விருதுக்கு ரூ.1 லட்சம் காசோலை, பதக்கம், சான்றிதழ் மற்றும் தகுதியுரை வழங்கப்படும். நிறுவனங்களுக்கான விருதுக்கு ரூ.5 லட்சம் காசோலை, பதக்கம், சான்றிதழ் மற்றும் தகுதியுரை வ ழங்கப்படும்.

இவ்விருகளுக்கான விரிவான வழிகாட்டி நெறிமுறைகள் மத்திய அமைச்சகத்தின்www.nca-wcd.nic.in என்னும் இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. குழந்தைகள், தனிப்பட்ட நபர்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து விருதுக்கான விண்ணப்பங்கள் இணையதளம் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். பிறமுறைகளில்அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்று கொள்ளப்படாது. விண்ணப்பங்கள் இணையதளம் வழியாக சமர்ப்பிக்க ஆகஸ்ட் 31ம் தேதி கடைசி நாளாகும். இணையதளம் மூலம் பெறப்படும் விண்ணப்பங்களில் அனைத்து தகுதிகள் பெற்ற விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டு குடியரசு தினத்தையொட்டிய முந்தைய வாரத்தில் குடியரசு தலைவரால் தேசிய விருது வழங்கப்படும். எனவே தகுதியானோர் விண்ணப்பித்து பயன்பெறலாம். இவ்வாறு அரியலூர் கலெக்டர் வினய் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED கொரோனா வைரஸ் தாக்கம் எதிரொலி பண்ணைகளில் ஆயிரக்கணக்கான கோழிகள் தேக்கம்