×

விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்பட கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணைகள் கட்ட வேண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டத்தில் தீர்மானம்

அரியலூர், ஜூலை 25: அரியலூர் மாவட்டத்தில் நிலத்தடி நீர்வளத்தை மேம்படுத்த கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணைகள் கட்ட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய பேரவை ௯ட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
அரியலூர் மாவட்டம் திருமானூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக்குழு சிறப்பு பேரவை கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. ஒன்றிய செயலாளர் புனிதன் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் சின்னதுரை சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் மேம்பட, விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்பட, குடிநீர் ஆதாரம் பாதுகாக்கப்பட கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணைகள் கட்ட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தை திருமானூர் ஒன்றியம் முழுவதும் செயல்படுத்த வேண்டும். நிறுத்தப்பட்ட முதியோர் உதவித்தொகையை உரிய விசாரணை செய்து தகுதியுடைய அனைவருக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். திருமானூர் ஒன்றியத்தில் பல கிராமங்களில் உள்ள குடிநீர் தட்டுப்பாட்டை ஒன்றிய நிர்வாகம் சரி செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மணியன், சாமிதுரை, மாவட்டக்குழு உறுப்பினர் சவுரிராஜன், மாவட்ட செயலாளர் மணிவேல், மாவட்ட செயற்குழு உறுப்பினர் இளங்கோவன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags :
× RELATED கொரோனா வைரஸ் தாக்கம் எதிரொலி பண்ணைகளில் ஆயிரக்கணக்கான கோழிகள் தேக்கம்