×

திருப்பூரில் சட்டவிரோத லாட்டரி விற்பனை அதிகரிப்பு

திருப்பூர், ஜூலை 24:  திருப்பூர் மாநகருக்கு உட்பட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனையை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  தமிழகம் முழுவதும் லாட்டரி சீட்டு விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்நிலையில், திருப்பூரில் தொடர்ந்து தொழிலாளர்களை குறிவைத்து இந்த விற்பனை நடந்து வருகிறது. பொது இடங்களில் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபடும் நபர்களை போலீசார் பிடிக்கின்றனர். ஆனாலும் லாட்டரி சீட்டு விற்பனை தொடர்ந்து அமோகமாக நடக்கிறது.  இதில் திருப்பூர் புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், ரயில் நிலையம், புஸ்பா ரவுண்டானா, நல்லூர், கூட்செட் பகுதி உள்ளிட்ட இடங்களில் நிற்கும் தொழிலாளர்களை குறி வைத்து இந்த லாட்டரி சீட்டு விற்பனை அமோகமாக நடப்பதாக கூறப்படுகிறது. இந்த விற்பனை குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே விற்பனை செய்யப்படுவதால், லாட்டரி சீட்டுகளை விற்கும் நபர்கள் போலீசார் கண்ணில் சிக்காமல் தப்பி விடுகின்றனர். ஆனால் போலீசார் தீவிர முயற்சி எடுத்தால், இந்த லாட்டரி சீட்டு விற்பனையை ஒழிக்க முடியம் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED நீலகிரி மாவட்டத்தில் வாக்குச்சாவடி...