சேலம் அரசு கலைக்கல்லூரியில் காலி இடங்களுக்கு வளாக கலந்தாய்வு

சேலம், ஜூலை 24: சேலம் அரசு கலைக்கல்லூரியில் காலியாக உள்ள இடங்களுக்கு வளாக கலந்தாய்வு நாளை மறுநாள் (26ம்தேதி) நடக்கிறது.சேலம் வின்சென்டில் அரசு கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. அதில், இளங்கலை, முதுகலை மற்றும் எம்பில் என 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். கல்லூரியில் இளங்கலையில் உள்ள 1,562 முதலாம் ஆண்டு இடங்களுக்கு, இரண்டு கட்டமாக கலந்தாய்வு நடத்தப்பட்டு, மாணவர் சேர்க்கை நடந்துள்ளது. இதனிடையே ஒரு சில பாடப்பிரிவுகளில் இன்னமும் காலியிடங்கள் உள்ளன. இதனை நிரப்புவதற்கான வளாக கலந்தாய்வு நாளை மறுநாள் (26ம் தேதி) காலை 10 மணிக்கு, கல்லூரியில் நடக்கிறது. இதில் சேர்க்கை பெற விருப்பமுள்ள மாணவர்கள், தங்களது அசல் சான்றிதழ்கள் மற்றும் கல்வி கட்டணத்துடன் கலந்து கொள்ள வேண்டும். ஏற்கனவே விண்ணப்பித்து, இதுவரை சேர்க்கை பெறாத மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். அதன்பின்னரும் காலியாக இருந்தால் மட்டும், பிற மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என கல்லூரி முதல்வர் கலைச்செல்வன் தெரிவித்துள்ளார்.

Related Stories: