சேலம் மார்க்கெட்டுக்கு முருங்கைக்காய் வரத்து அதிகரிப்பு

சேலம், ஜூலை 24: அரவக்குறிச்சியில் இருந்து சேலம் மார்க்கெட்டுக்கு முருங்கைக்காய் வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சுற்றுவட்டார பகுதிகளில் முருங்கை மரங்கள் அதிகளவில் இருக்கின்றன. இப்பகுதியில் பத்து சதவீத விவசாயிகள் முருங்கை மரங்கள் வளர்ப்பில் அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். முருங்கைக்கீரை, முருங்கைக்காய் உள்ளிட்டவைகள் மூலம் வருமானம் ஈட்டி வருகின்றனர்.தற்போது அரவக்குறிச்சி பகுதியில் முருங்கைக்காய் சீசன் களைகட்ட தொடங்கியுள்ளது. அங்கிருந்து தினசரி 2 முதல் 3 டன் அளவுக்கு முருங்கைக்காய் விற்பனை வருகிறது. இங்கு விற்பனைக்கு வரும் முருங்கைக்காயை சில்லரை காய்கறிகள் வியாபாரிகள் வாங்கிச்சென்று விற்பனை செய்து வருகின்றனர். ஒரு முருங்கைக்காய் ₹3 முதல் ₹4 வரை விற்பனை செய்யப்படுகிறது. தற்போது சீசன் தொடங்கியுள்ளதால் 3 டன் அளவுக்கு தான் விற்பனை வருகிறது. படிப்படியாக வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது. அப்போது 5 முதல் 10 டன் அளவில் இருக்கும். ₹10க்கு 4 முதல் 5 முருங்கைக்காய் விற்கப்படும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: