ஜலகண்டாபுரத்தில் ₹20 லட்சத்திற்கு கொப்பரை ஏலம்

ஜலகண்டாபுரம், ஜூலை 24:

சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரத்தில் திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க கிளை சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று நடந்த ஏலத்தில் ஜலகண்டாபுரம் மற்றும் எடப்பாடி, கொங்கணாபுரம், பூலாம்பட்டி, மேட்டூர், கொளத்தூர், நங்கவள்ளி, மற்றும் தர்மபுரி சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் 480 மூட்டை கொப்பரைகளை விற்பனைக்காக கொண்டு வந்து குவித்தனர்.இந்த ஏலத்தில் ஈரோடு மற்றும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டனர். தரத்திற்கேற்றாற்போல் முதல் தரம் கிலோ ₹82.60 முதல் ₹90.90 வரையிலும், இரண்டாம் தரம் கிலோ ₹49 முதல் ₹78.30 வரையிலும் ஏலம் போனது. இதன்மூலம் ₹20 லட்சத்திற்கு வர்த்தகம் நடந்தது.

Related Stories: