×

₹20 லட்சத்திற்கு கொப்பரை ஏலம்

ஜலகண்டாபுரம், ஜூலை 24: ஜலகண்டாபுரத்தில் திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க கிளை சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று நடந்த ஏலத்தில் ஜலகண்டாபுரம் உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் 480 மூட்டை கொப்பரைகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர். இந்த ஏலத்தில் முதல் தரம் கிலோ ₹82.60 முதல் ₹90.90 வரையிலும், இரண்டாம் தரம் கிலோ ₹49 முதல் ₹78.30 வரையிலும் ஏலம் போனது. ₹20 லட்சத்திற்கு வர்த்தகம் நடந்தது.

Tags :
× RELATED சந்தைக்குள் புகுந்து மின் ஒயர்கள் திருட்டு