×

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு வழிகாட்டி ஆசிரியர்களுக்கு பயிற்சி

நாமக்கல், ஜூலை 24: நாமக்கல்லில் நடைபெறுவுள்ள தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்காக, மாவட்ட அளவில் வழிக்காட்டி ஆசிரியர்களுக்கான பயிற்சி நேற்று  நடைபெற்றது.  குழந்தைகளிடம் அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் வகையில், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், 27வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு  அடுத்த மாதம் நடைபெறுகிறது.இதற்காக மாவட்ட அளவில் வழிக்காட்டி ஆசிரியர்களுக்கான பயிற்சி, நேற்று நாமக்கல்லில் நடைபெற்றது. மாவட்ட பொருளாளரும், முதுகலை ஆசிரியருமான ரகோத்தமன்  வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட மாநில கருத்தாளர்கள் ஜெயமுருகன், திருநாவுக்கரசு ஆகியோர் அறிவியல் விழிப்புணர்வு, ஆய்வறிக்கை தயார் செய்தல் குறித்து விளக்கினார்கள். மாநில செயலாளர் தியாகராஜன் அறிவியல் இயக்கத்தின் சிறப்புகள் குறித்து வழிகாட்டி ஆசிரியர்களுக்கு விளக்கினார். அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் கண்ணன், தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு குறித்து பேசினார். கல்வி ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் துரைசாமி, மணிராஜா, ராமமூர்த்தி ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.பயிற்சி முகாமில் 150க்கும் மேற்பட்ட வழிகாட்டி ஆசிரியர்கள் கலந்துகொண்டு  பயன் பெற்றனர். அறிவியல் இயக்க துணைச்செயலாளர் பிரகாசம் நன்றி கூறினார்.

Tags :
× RELATED சந்தைக்குள் புகுந்து மின் ஒயர்கள் திருட்டு