×

நாமக்கல் அரசு மருத்துவமனை உணவை புறக்கணிக்கும் நோயாளிகள்

நாமக்கல், ஜூலை 24:  நாமக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவு தரமற்றதாகவும் ருசி இல்லை என்றும் கூறி மருத்துவமனைக்கு வெளியே தனியார் அமைப்பினர் வழங்கும் உணவை நோயாளிகள் வாங்கி உண்பதாக தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவமனையில் எய்ட்ஸ் மற்றும் ஹெச்ஐவி, அவசர சிகிச்சை பிரிவு, எலும்பு முறிவு பிரிவு, தீக் காய பிரிவு, குழந்தைகள் நலப் பிரிவு, கண் பிரிவு மற்றும் சித்தா, ஆயுர் வேதா உள்ளிட்ட பிரிவுகள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. நாமக்கல் மட்டுமின்றி அதனை சுற்றியுள்ள மாவட்டங்களை சேர்ந்தவர்கள் இங்கு நோயாளிகளாகவும், புற நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். குறிப்பாக எய்ட்ஸ் மற்றும் ஹெச்ஐவி பிரிவிற்கு வெளி மாவட்டங்களை சேர்ந்த நோயாளிகள் ஏராளமானோர் இங்கு சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.இந்நிலையில் நூற்றுக்கும் அதிகமானோர் உள் நோயாளிகளாகவும், கர்ப்பிணிகளும் மற்றும் குழந்தை பெற்ற தாய்மார்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுக்காக அரசு மருத்துவமனையில், குறைந்தபட்சம் காலை 200 நபர்களுக்கு இட்லி சாம்பாரும், மதியம் 200 நபர்களுக்கு சாப்பாடு, சாம்பார் மற்றும் இரவு 200 நபர்களுக்கு உப்புமா என நாள் ஒன்றுக்கு 600க்கும் குறையாத நபர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சமீப காலமாக நாமக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் வழங்கப்படும் உணவு தரமானதாக இல்லை என்றும் ருசியாக இல்லை என்றும் நோயாளிகள் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது. தரமில்லா மற்றும் ருசி இல்லாத உணவை நோயாளிகளும் நோயாளிகளுக்கு உதவியாக இருப்பவரும் வாங்கி சாப்பிட மறுத்து வருகின்றனர். மாறாக அரசு மருத்துவமனைக்கு வெளியே தனியார் தொண்டு அமைப்பினர் நாள்தோறும் இலவசமாக சாப்படு மற்றும் மூலிகை ரசம் வழங்கி வருகின்றனர். இந்த சாப்பாடு மற்றும் மூலிகை ரசத்தை பலர் விரும்பி வாங்கி சாப்பிடுகின்றனர்.
இதனால் இங்கு நாளுக்கு நாள் நோயாளிகள் மற்றும் அவர்களின் உதவியாளர்களின் கூட்டம் அதிகமாகி கொண்டே செல்கிறது. இதனால், நாமக்கல் அரசு மருத்துவமனையில் நாள்தோறும் செய்யப்படும் உணவு வீணாகிறது என்று குற்றச்சாட்டும் நிலவுகிறது. அரசு மருத்துவமனையில் வழங்கப்படும் உணவு வீணாகமல் தடுக்க தரமானதாக சமைத்து வழங்க வேண்டும் என்று நோயளிகள், தெரிவித்துள்ளனர்.

Tags :
× RELATED சந்தைக்குள் புகுந்து மின் ஒயர்கள் திருட்டு