×

நாமகிரிப்பேட்டையில் ₹46 லட்சத்திற்கு மஞ்சள் ஏலம்

நாமகிரிப்பேட்டை, ஜூலை 24: நாமகிரிப்பேட்டையில், ₹42 லட்சத்திற்கு மஞ்சள் ஏலம் போனது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நாமகிரிப்பேட்டையில் செயல்பட்டு வரும் வேளாண் உற்பத்தியாளர்கள் விற்பனை சங்கத்தில், வாரந்தோரும் செவ்வாய்கிழமை மஞ்சள் ஏலம் நடைபெற்று வருவது வழக்கம். அதன்படி நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு நாமகிரிப்பேட்டை மற்றும் முள்ளுக்குறிச்சி, மெட்டலா, மங்களபுரம், புதுப்பட்டி, சீராப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவசாயிகள் மஞ்சளை விற்பனைக்காக கொண்டு வந்து குவித்தனர். அதேபோல ஆத்தூர், சேலம், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மஞ்சளை வாங்கவும் வியாபாரிகள் வந்திருந்தனர். இதில் மொத்தம் 970 மஞ்சள் மூட்டை விற்பனைக்கு வந்தது. விரலி ரகம் 680 மூட்டையும், உருண்டை ரகம் 260 மூட்டையும், பனங்காலி ரகம் 30 மூட்டை என மொத்தம் 970 மூட்டைகள் எலத்திற்கு வந்தன. விரலி மஞ்சள் அதிகப்பட்சம் குவிண்டால் ₹9,369க்கும், குறைந்தபட்சம் 6,419க்கும், உருண்டை ரகம் குவிண்டால் அதிகப்பட்சம் ₹7,5698க்கும், குறைந்தபட்சம் ₹6,319க்கும், பனங்காலி அதிகப்பட்சம் குவிண்டால் ₹14,279க்கும், குறைந்தபட்சம் ₹9,502க்கும் என மொத்தம் 970 மூட்டைகள் ₹46 லட்சத்துக்கு மஞ்சள் விற்பனையானது.

Tags :
× RELATED வையப்பமலையில் பக்தர்கள் கிரிவலம்