×

ஓசூர் பானு டூல்ஸ் நிறுவனத்தில் பரிசளிப்பு விழா

ஓசூர், ஜூலை 24: ஓசூர் பைபாஸ் சாலை வாசவி தெருவில் பானு டூல்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு அனைத்து வகையான முன்னணி நிறுவனங்களின் பவர் டூல்ஸ்கள் விற்பனை செய்யப்படுகிறது. விற்பனையை அதிகரிக்கும் நோக்கில், ஒவ்வொரு மாதமும் பரிசுகள் அறிவிக்கப்பட்டது. அதன்படி, கடந்த ஜூன் மாதம் ₹2 ஆயிரத்திற்கு மேல் பவர் டூல்ஸ் வாங்கியவர்களில், 5 பேரை தேர்வு செய்து, அவர்களுக்கு சாம்சாங் போன் பரிசாக வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் ஹரிஹரபுத்திர நிதி நிறுவன இயக்குநர் மணிகண்டன், இணை இயக்குநர் ராமசந்திரன், ஆனந்த் எலக்ட்ரிக்கல் ஆனந்த் ஆகியோர் கலந்து கொண்டு பரிசுகள் வழங்கினர். இதுகுறித்து பானு டூல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் சரவணன் கூறுகையில், ₹2 ஆயிரம் மதிப்புள்ள பவர்டூல்ஸ் வாங்குபவர்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகிறது. ஜூன் மாதத்தில் 5 பேருக்கு சாம்சங் போன், ஜூலை மாதம் 10 பேருக்கு தங்க நாணயங்கள், செப்டம்பரில் 5 பேருக்கு ஹேண்ட் டூல்ஸ்சும், ஆகஸ்ட் மாதம் 25 பேருக்கு டைட்டன் வாட்சும், தீபாவளி மெகா சிறப்பு பரிசாக ஒருவருக்கு எக்சல் சூப்பர் பைக் வழங்கப்படும் என்றார்.

Tags :
× RELATED மனைவியுடன் பஸ்சில் வந்த டிரைவர் திடீர் சாவு