×

தர்மபுரி நகராட்சியில் கொசு புகை மருந்து அடிக்கும் பணி தீவிரம்

தர்மபுரி, ஜூலை 24: தர்மபுரி நகராட்சியில் கொசுக்களை கட்டுப்படுத்த, வார்டு வாாியாக தெருக்களில் புகை மருந்து அடிக்கம் பணியில், துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். தென்மேற்கு பருவமழை தர்மபுரி மாவட்டத்தில் பரவலாக பெய்து வருகிறது. இதனால் குடியிருப்பு பகுதிகளில் சாக்கடை கலந்த மழைநீர் தேங்குகிறது. கொசுக்கள் அதிகம் உற்பத்தியாவதுடன், டெங்கு உள்ளிட்ட நோய் பாதிப்பு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தர்மபுரி நகராட்சி கமிஷனர் மகேஸ்வரி உத்தரவின் பேரில், கடந்த சில நாட்களாக நகராட்சியில் வார்டு வாரியாக தெருக்களில் கொசுக்களை கட்டுப்படுத்த புகை மருந்து அடிக்கும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அதன்படி நேற்று கோட்டை, டேக்கீஸ்பேட்டை, கடைவீதி, பஸ் நிலையம், நெசவாளர் நகர், எஸ்வி ரோடு ஆகிய பகுதிகளில் கொசு புகை மருந்து அடிக்கும் பணி நடந்தது. இந்த பணியை துப்புரவு ஆய்வாளர்கள் கோவிந்தராஜன், ரமணசரண், சுசீந்திரன் ஆகியோர் பார்வையிட்டனர். தொடர்ச்சியாக வார்டு வாரியாக புகை மருந்து அடிக்கப்படும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா