×

போலீசார் எனக்கூறி லாரி டிரைவரிடம் பணம், செல்போன் பறிமுதல் 4 பேர் கைது

அரியலூர்,ஜூலை 23: கீழப்பழுவூர் அருகே போலீஸ் எனக்கூறி லாரி ஓட்டுநரிடம் பணம் மற்றும் செல்போனை பறித்த 4பேரை கீழப்பழுவூர் போலீசார் கைது செய்தனர்.தஞ்சை மாவட்டம் பூதலூர், வில்வராயன்பட்டியை சேர்ந்தவர் புதுமைசேகர்(44), லாரி டிரைவர். இவர் நேற்று முன்தினம் இரவு சென்னையிலிருந்து புதுக்கோட்டைக்கு கோழி தீவனம் ஏற்றிக் கொண்டு லாரியில் வந்துள்ளார்.அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகேயுள்ள கள்ளூர் பிரிவு பாதை அருகே வந்த போது, அங்கு நின்றிருந்த 4 பேர் லாரியை மறித்து, நாங்கள் போலீஸ்காரர்கள் எனக்கூறி புதுமைசேகரிடம் ரூ.500 மற்றும் செல்போனை பறித்து கொண்டு தப்பிச்சென்றுள்ளனர். இதுகுறித்து, கீழப்பழுவூர் காவல்நிலையத்தில் புதுமைசேகர் கொடுத்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணையில் ஈடுபட்டபோது, வழிபறியில் ஈடுபட்டது, கள்ளூர் அருகேயுள்ள கீழகொளத்தூர் கிராமத்தை சேர்ந்த அண்ணாதுரை மகன் விஜய்(20), செல்வராஜ் மகன் கலைவாணன் (24), கிருஷ்ணமூர்த்தி மகன் பாலமுருகன்(22), மற்றும் பெரியசாமி மகன் வீரமணி(19) எனதெரிய வந்தது. இதில், வீரமணிக்கு உடலில் காயமிருந்ததால், மருத்துவமனையில் சேர்த்துவிட்டு மற்ற 3 பேரையும் நேற்று காலை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags :
× RELATED கொரோனா வைரஸ் தாக்கம் எதிரொலி பண்ணைகளில் ஆயிரக்கணக்கான கோழிகள் தேக்கம்