×

மண் ஈரப்பதத்தை பயன்படுத்தி கோடை உழவு செய்திடுங்கள்

அரியலூர், ஜூலை23: அரியலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்த மழை ஈரத்தை கொண்டு உடனடியாக கோடை உழவு செய்து களை, பூச்சி மற்றும் பூஞ்சான வித்துக்களை அழித்து மண்ணின் வளத்தை பெருக்கிடலாம்.அடுத்தடுத்து மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் தொடர்ந்து கோடை உழவு செய்தால் நேரடி விதைப்பில் களைகளின் பாதிப்பு இல்லாமல் பயிர்களை காக்க முடியும் மேலும் களைக்கொல்லி பயன்பாட்டை குறைத்து மண் வளத்தை பாதுகாக்கலாம். உயர்விளைச்சல் தரும் வேளாண்மை தொழில் நுட்பங்களை உழவர்களின் இல்லங்களுக்கே சென்று வழங்கிட வேளாண்மை துறை அலுவலர்கள் தயாராக உள்ளனர்.எனவே இருக்கின்ற மண் ஈரத்தைப்பயன்படுத்தி இன்றே கோடை உழவு செய்திடுங்கள். கோடை உழவுக்குப் பின் நிலத்தை சமன்செய்திடுங்கள், நிலம் சமன்செய்யும் கருவி வேளாண்மை பொறியியல் துறையில் குறைந்தவாடகைக்கு கிடைக்கின்றது. நிலத்தடி நீர் ஆதாரத்தினை பெருக்கிடவும், மீன் வளர்த்திடவும் விவசாயிகள்பாசன நீர் பயன்பாட்டிற்கும் உதவும் பண்ணை குட்டைகள் 100 சதவிகித மான்யத்தில் அமைக்க வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் திட்டம் செயல்படுத்தப்படஉள்ளது.விவசாயிகளின் தேவைக்கு உங்கள்பகுதி வேளாண்மை உதவி அலுவலர்களை இன்றே தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு வேளாண் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags :
× RELATED கொரோனா வைரஸ் தாக்கம் எதிரொலி பண்ணைகளில் ஆயிரக்கணக்கான கோழிகள் தேக்கம்