×

ஆகஸ்ட் 16ம் தேதிக்குள் மக்காச்சோள பயிர் காப்பீடு செய்ய அரியலூர் விவசாயிகளுக்கு அழைப்பு

அரியலூர், ஜூலை 23: பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் விவசாயிகளுக்கு மக்காச்சோள பயிரில் எதிர்பாராமல் ஏற்படும் இழப்புகளுக்கு நிதியுதவி வழங்கி பாதுகாக்கவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும் மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்களை கடைபிடிப்பதை ஊக்குவிக்கவும் செயல்படுத்தப்படுகிறது. 2018-19ம் ஆண்டில் மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதலால் மகசூல் இழப்பு பெருமளவில் ஏற்பட்டது. நடப்பு காரீப் பருவத்தில் இறவையில் மக்காச்சோளம் பயிரிட்டுள்ள விவசாயிகள் பயிர் காப்பீடு செய்யவும், படைப்புழுவால் மகசூல் இழப்பு ஏற்படும் பட்சத்தில் விவசாயிகளுக்கு மகசூல் இழப்புக்கேற்ப நிவாரணம் வழங்க ஏதுவாக இருக்கும்.இத்திட்டத்தின்கீழ் கடன் பெறும் விவசாயிகள், அவர்கள் கடன் பெறும் வங்கிகளில் கட்டாயமாக பயிர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்யப்படுவர். கடன்பெறா விவசாயிகள் பொது சேவை மையங்கள் மூலமாகவோ, வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவோ விருப்பத்தின்பேரில் பதிவு செய்து கொள்ளலாம்.இவ்வாறாக மக்காச்சோளம் பயிரிடும் விவசாயிகள் இத்திட்டத்தில் பதிவு செய்ய ஆகஸ்ட் 16ம் தேதி கடைசி நாளாகும். எனவே விவசாயிகள் இறுதி நேர அவசரத்தை தவிர்க்கவும், விவசாயிகளின் விண்ணப்பங்கள் விடுபடாமல் இருக்கவும், பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் காப்பீட்டுத்தொகை செலுத்தி தங்களது மக்காச்சோளப் பயிரை முன்கூட்டியே காப்பீடு செய்து கொள்ளலாம்.பயிர் காப்பீட்டு தொகையில் விவசாயிகள் 2 சதவீதம் மட்டும் அதாவது மக்காச்சோள பயிருக்கு ஏக்கருக்கு ரூ.446 மட்டும் காப்பீட்டு கட்டணமாக செலுத்தினால் போதுமானது. விவசாயிகள் இத்திட்டத்தின்கீழ் பதிவு செய்யும்போது முன்மொழிவு விண்ணப்பத்துடன் பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல்பக்க நகல், ஆதார் அட்டை நகலை இணைத்து கட்டண தொகையை செலுத்தியபின் அதற்கான ரசீதையும் பெற்று கொள்ளலாம். பொது சேவை மையத்தில் பயிர் காப்பீடு செய்யும்போது சேவை கட்டணம் செலுத்த தேவையில்லை. மேலும் இயற்கை பாதிப்பு ஏற்படும் முன்னரே பயிர் காப்பீடு செய்ய வேண்டும். பயிர் சேதம் ஏற்பட்ட பிறகு அப்பயிருக்கு பயிர் காப்பீடு செய்ய முடியாது. எனவே தொடர் பாதிப்புள்ளாகும் பகுதியில் உள்ள விவசாயிகள் ஆகஸ்ட் 16ம் தேதிக்குள் பயிர் காப்பீடு செய்ய வேண்டும்.

காரீப் மக்காச்சோள பயிருக்கு தா.பழூர் வட்டாரத்தில் புரந்தான் (வடக்கு), புரந்தான் (தெற்கு), சாத்தம்பாடி, மணகெதி, உல்லியக்குடி, வெண்மான்கொண்டான் (மேற்கு), வெண்மான்கொண்டான் (கிழக்கு), பருக்கல் (மேற்கு), பருக்கல் (கிழக்கு), சுத்தமல்லி, கீழநத்தம், அம்பாப்பூர், கடம்பூர், கோவிந்தபுத்தூர், நடுவலூர் (மேற்கு), நடுவலூர் (கிழக்கு), உடையவர்தீயனூர், வேம்புக்குடி, தா.பழூர், உதயநத்தம் (கிழக்கு), உதயநத்தம் (மேற்கு), இருக்கையூர், காரைக்குறிச்சி, நாயகனைப்பிரியாள், கோடங்குடி (தெற்கு), கோடங்குடி (வடக்கு), அணைக்குடம், சோழமாதேவி, இடங்கன்னியாகும்.ஜெயங்கொண்டம் வட்டாரத்தில் இளையபெருமாள்நல்லூர், பாப்பாக்குடி (தெற்கு), காட்டகரம் (வடக்கு), தழுதாழைமேடு, குந்தவெளி (கி), குந்தவெளி மே), குருவாலப்பர்கோவில், அங்கராயநல்லூர் (கி), அங்கராயநல்லூர் (மே), த.சோழன்குறிச்சி (தெ), உடையார்பாளையம் மே), தேவமங்கலம், வானதிரையான்பட்டினம், சூரியமணல், இடையார், தத்தனூர் (கிழக்கு), தத்தனூர் (மேற்கு), த.சோழன்குறிச்சி (வடக்கு), உடையார்பாளையம் (கிழக்கு), பிலிச்சிக்குழி ஆகிய கிராமங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.ஆண்டிமடம் வட்டாரத்தில் பெரியகிருஷ்ணாபுரம், ராங்கியம், ராமன், திருக்களப்பூர், ஆத்துக்குறிச்சி, ஓலையூர், அழகாபுரம், மேலூர், கூவத்தூர் (வடக்கு), அய்யூர், இலையூர் (மேற்கு), அணிக்குதிச்சான் (வ), வரதராஜன்பேட்டை, விளந்தை (தெ), சிலுவைச்சேரி, விளந்தை (வ), கூவத்தூர் (தெ), குவாகம், மருதூர், வாரியங்காவல், தேவனூர், காட்டாத்தூர் (தெ), காட்டாத்தூர் (வ), ஆண்டிமடம் ஆகிய அறிவித்த கிராமங்களாகும். இக்கிராமங்களில் மக்காச்சோளம் பயிரிட்டுள்ள விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து பயன்பெறலாம். இவ்வாறு அரியலூர் கலெக்டர் வினய் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED கொரோனா வைரஸ் தாக்கம் எதிரொலி பண்ணைகளில் ஆயிரக்கணக்கான கோழிகள் தேக்கம்