×

வங்கிகளில் உழவர் கடன் அட்டை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் விவசாயிகளுக்கு அழைப்பு

அரியலூர்,ஜூலை 24: வங்கிகளில் உழவர் கடன் அட்டை பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என அரியலூர் கலெக்டர் வினய் தெரிவித்துள்ளார்.இது குறித்து கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அரியலூர் மாவட்டத்தில் விவசாயப்பணிகளில் ஈடுபட்டு வரும் விவசாயிகள், தங்கள் நிதிதேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், வங்கிகள் மூலம் கிசான் கிரெடிட் கார்டுகள் (உழவர்கடன்அட்டைகள்) வழங்கப்படுகின்றன. இந்த கடன்அட்டை அனைத்து தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றன.உழவர்கடன்அட்டைகளைவிவசாயிகள்பயிர்சாகுபடிசெய்வதற்கும், கால்நடைவளர்ப்பிற்கும், மீன்வளர்ப்பிற்கும்பெற்றுக்கொள்ளலாம். பயிர்சாகுபடி பரப்பளவு மற்றும் கால்நடைவளர்ப்பு குறித்து, மூலதனத்தின் அளவுக்கேற்ப கடன்அட்டைகள் வழங்கப்படுகின்றன.இத்திட்டத்தின்மூலம்விவசாயிஒருவர்ஈட்டுறுதிஇல்லாமல் 1.60 இலட்சம்வரையிலும், நிலஈட்டுறுதிஅடிப்படையில் 3 இலட்சம்வரையிலும்கடன்பெற்றுக்கொள்ளளலாம்.உழவர்கடன்அட்டையின்காலஅளவு 5 ஆண்டுகளாகும். இந்த அட்டைகள் மூலம் கடன் பெற்று உரிய தவணை லத்தில் கடனை திரும்ப செலுத்தும் விவசாயிகளுக்கு, 4 சதவீதம் மட்டுமே சலுகை வட்டித்தொகையாக வசூலிக்கப்படுகிறது.எனவே உழவர்கடன்அட்டைபெறவிருப்பம் உள்ள விவசாயிகள் இத்திட்டத்தில் இணைந்து கொண்டு அருகில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளை அணுகி ஆதார்அட்டை, வங்கிசேமிப்புபுத்தகம், நிலஆவணங்கள் போன்றஆவணங்களை சமர்ப்பித்து கடன்அட்டையைபெற்று பயன்பெறலாம் என கலெக்டர் வினய் தெரிவித்துள்ளார்.Tags :
× RELATED கொரோனா வைரஸ் தாக்கம் எதிரொலி பண்ணைகளில் ஆயிரக்கணக்கான கோழிகள் தேக்கம்