×

அரசு ஓய்வூதியதாரர்கள் குறைதீர் கூட்டம் அரியலூரில் 31ம் தேதி நடக்கிறது

அரியலூர்,ஜூலை 24: அரியலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் ஓய்வூதியம் மற்றும் குடும்பஓய்வூதியம்பெறுவோருக்கானமாதாந்திரகுறைதீர்கூட்டம் அரியலூர் மாவட்டக்கருவூல அலுவலர் தலைமையில் வரும் 31ம் தேதி அன்றுகாலை 10.30 மணிக்குநடைபெறஉள்ளது. இதில்ஓய்வூதியர்கள் அரியலூர் மாவட்டக்கருவூலம் மற்றும் சார்நிலைக்கருவூலங்களில் நிலுவையில் உள்ள குடும்ப ஓய்வூதியம், வாழ்நாள்நிலுவை, கூடுதல்ஓய்வூதியம், திருந்திய ஓய்வூதியம் போன்ற தங்களதுகுறைகளை தெளிவாக குறிப்பிட்டு மாதாந்திர ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் கூட்ட விண்ணப்பம் என தலைப்பிட்டு மாவட்டக்கருவூலஅலுவலர், அரியலூர்என்றமுகவரிக்கு 26.ம்தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு ட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.அரியலூர்மாவட்டகருவூலஅலுவலரின்அதிகார வரம்பிற்கு உட்பட்ட அனைத்து விண்ணப்பங்கள் மீதும் உடனடி நடவடிக்கை எடுத்து உரியஆணைகள் மற்றும் நிலுவைத் தொகைவழங்கப்படும். மேலும் கூட்டத்தின் போது ஓய்வூதிய விவரங்களை புத்தகத்தில்பதிவுசெய்தல், நாமினேஷன்தாக்கல்செய்தல், வருமானவரிபடிவம் வழங்குதல்,புதியமருத்துவக்காப்பீட்டுஅடையாளஅட்டைக்கான விண்ணப்பங்கள்பெறுதல், ஓய்வூதியர் அடையாள அட்டை பெறுதல் போன்ற சேவைகளையும் பெற்றுக் கொள்ளலாம் என மாவட்டகருவூலஅலுவலர்நடராஜன் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED பெரம்பலூர் /அரியலூர் கொள்ளை நோய் பரவலை...