×

இலுப்பூர் அருகே பெரியகும்பபட்டி காயாம்பு அய்யனார் கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

இலுப்பூர், ஜூலை 24: இலுப்பூர் அருகே பெரியகுரும்பபட்டியில் உள்ள காயாம்பு அய்யனார் பாப்பாத்தி அம்மன் கோயில் திருவிழா நேற்று முன்தினம் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது.புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே பெரிய குரும்பபட்டியில் மிகவும் பிரசித்திபெற்ற காயாம்பு அய்யனார் பாப்பாத்தி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடி திருவிழா நேற்று முன்தினம் காப்பு கட்டுதல் மற்றும் கரகம் பாலித்தல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. அதை தொடர்ந்து தினமும் மண்டகப்படிகாரர்களால் அம்மனுக்கும், அய்யனாருக்கும் சிறப்பு பூஜைகளும், சிறப்பு அபிஷேகங்களும் நடைபெற்று வருகிறது. தினமும் இரவு சாமி கோயிலை வலம் வந்து பூசாரி அருள் வாக்கு கூறும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.விழாவின் முக்கிய விழாவான திருவிழா வரும் 29 தேதி நடைபெறுகிறது. விழாவையொட்டி பக்தர்கள் பொங்கள் வைத்தும், முளைபாரி எடுத்துவந்து சிறப்பு வழிபாடு நடத்த உள்ளனர். மேலும், பால்குடம் எடுத்து வந்து அபிஷேகம் செய்து நேத்தி கடன் செலுத்துகின்றனர். விழாவையொட்டி கலை நிகழ்ச்சிகள் மற்றும் புராதன நாடகம் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள், ஊர்முக்கியஸ்தர்களும் செய்து வருகின்றனர்.

Tags :
× RELATED வெப்பம் அதிகரிப்பு காரணமாக பொன்னமராவதி முக்கிய சாலைகள் வெறிச்சோடியது