×

மர்ம நபர்களுக்கு வலை கூத்தாநல்லூரில் தடை செய்யப்பட்ட ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

மன்னார்குடி, ஜூலை24: கூத்தாநல்லூர் நகராட்சி ஆணையர் ராஜகோபால் உத்தரவின் பேரில் சிறப்பு கண்காணிப்பு குழுவினர் நகராட்சி எல்லைக்குட்பட்ட பல்வேறு பலசரக்கு கடைகளில் இருந்து அரசால் தடை செய்யப்பட்ட ரூ 50 ஆயிரம் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர்.சுற்றுச் சூழலை மாசுப்படுத்தும் , நிலத்தடி நீர் மட்டத்தை வெகுவாக பாதிக்கும் ஒரு முறை மட்டும் உபயோக படுத்தி விட்டு தூக்கி எரியும் 14 வகையான அபாயகரமான பிளாஸ்டிக் பொருட்களை தமிழகம் முழுவதும் கடந்த ஐனவரி 1ம் தேதி முதல் தமிழக அரசு தடை விதித்து சட்டம் இயற்றியது.மேலும் தடை செய்யப் பட்ட பிளாஸ்டிக் பொருட்களை மொத்தமாக விற்பனை செய்வது, கிடங்குகளில் சேமித்து வைப்பது, கடைகளின் மூலம் பொது மக்களுக்கு விற்பனை செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுவோர்களுக்கு பறிமுதல் செய்யப் படும் பொருள்களுக்கு ஏற்ப அபராதம் விதிப்பதோடு நீதிமன்ற நடவடிக்கையும் மேற் கொள்ளப் படும் எனவும் தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் கூத்தாநல்லூர் நகராட்சி ஆணையர் ராஜகோபால் உத்தரவின் பேரில் நகராட்சி சுகாதார ஆய்வாளர் அருண்குமார் தலைமையில் ப்புரவு பணி மேற்பார்வையாளர் வாசுதேவன் மற்றும் நகராட்சி பணியாளர்கள் ஆகியோர் அடங்கிய சிறப்பு கண்காணிப்பு குழுவினர் கூத்தாநல்லூர் கடைத் தெருவில் உள்ள ஒட்டல்கள் மற்றும் பல்வேறு பலசரக்கு கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.சோதனையின் போது கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப் பட்ட ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான பாலித்தீன் பைகள், குவளைகள், உறிஞ்சு குழாய்கள், நெய்யாத பைகள் மற்றும் கரண்டி உள்ளிட்ட பொருட்கள் விற்பனை மற்றும் பயன்பாட்டிற்காக பதுக்கி வைக்கப் பட்டிருந்தது தெரிய வந்தது . அப்பொருட்களை நகராட்சி அதிகாரிகள் கைப்பற்றி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பதுக்கி வைத்திருந்த நபர்களுக்கு அபராதம் விதித்து எச்சரித்தனர்.


Tags :
× RELATED வாக்களிக்க உற்சாகத்துடன் வந்த மாற்று திறனாளிகள், மூத்தோர்