திருவெறும்பூர் அருகே 2 நாளாக வீட்டிற்குள் இறந்த நிலையில் கிடந்த ஒரிசா தொழிலாளி உடல் மீட்பு போலீசார் விசாரணை

திருவெறும்பூர், ஜூலை 24: ஒரிசா மாநிலம் டாடிபட்டியை சேர்ந்தவர் ஜெஹாரா ஜேசைய்யா(49). இவர் திருவெறும்பூர் அடுத்த துவாக்குடி அருகே ராவுத்தர்மேடு பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு குடியேறி துவாக்குடி பகுதியில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கம்பெனிகளில் கிரைண்டிங் ஒர்க்ஸ் வேலை பார்த்து வந்துள்ளார். மேலும் ஜெஹாரா ஜேசைய்யா தனியாக வாடகை வீட்டில் தங்கி உள்ளார். இவரது மனைவி இறந்து விட்டதாகவும், இவரது பிள்ளைகள் ஒரிசாவில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தனியாக இருப்பதால் மது பழக்கத்திற்கு ஜெஹாரா ஜேசைய்யா அடிமையாகி உள்ளார். மேலும் இவருக்கு நெஞ்சுவலி அடிக்கடி வரும் என்றும் தெரிகிறது. இந்நிலையில் கடந்த 21ம் தேதி முதல் வீட்டை விட்டு ஜெஹாரா ஜேசைய்யா வெளியில் வரவில்லை. அவரது சைக்கிள் மட்டும் வீட்டிற்கு வெளியே நின்றுள்ளது. 2 நாட்களாக சைக்கிள் அங்கு நிற்பதை பார்த்த பக்கத்து வீட்டுக்காரர்கள் இது குறித்து துவாக்குடி போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து துவாக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீட்டின் கதவை உடைத்து பார்த்தபோது வீட்டிற்குள் ஜெஹாரா ஜேசைய்யா படுக்கையிலேயே இறந்து கிடந்துள்ளார். இவர் இறந்து இரு நாட்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது.ஜெஹாரா ஜேசைய்யாவின் உடலை போலீசார் கைப்பற்றி துவாக்குடியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவரது பிள்ளைகளுக்கு துவாக்குடி போலீசார் தகவல் கொடுத்துள்ளனர். ஒரிசாவில் இருந்து அவர்கள் வந்த பிறகே ஜெஹாரா ஜேசைய்யாவின் உடல் பிரேத பரிசோதனை செய்து அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படும் என துவாக்குடி போலீசார் தெரிவித்தனர்.பிளஸ் 2 மாணவர் மீது தாக்குதல்: திருச்சி சங்கிலியாண்டபுரம் மறைமலை அடிகளால் தெருவை சேர்ந்தவர் முருகேசன் மகன் சதீஸ்குமார்(17). இவர் எடத்தெருவில் உள்ள பள்ளி ஒன்றில் பிளஸ் 2 படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் அரசு வழங்கிய இலவச லேப்டாப் ஒன்றில் நண்பர்களுடன் அமர்ந்து படம் பார்த்துக்ெகாண்டிருந்தார். அப்போது படம் பார்ப்பதில் நண்பர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. இதில் நண்பர்கள் ஒன்று ேசர்ந்து சதீஸ்குமாரை தாக்கினர். இது குறித்த புகாரின் பேரில் பாலக்கரை போலீசார் வழக்குப்பதிந்து தப்பியோடிய நண்பர்களை தேடி வருகின்றனர்.

மனைவியை தாக்கிய கணவருக்கு வலை: திருச்சி தாராநல்லூர் தேவி ஸ்டோரை சேர்ந்தவர் பாண்டியன்(38), கூலித்தொழிலாளி. இவரது மனைவி ரேவதி (34). இவர் கணவரின் சந்தேகப்புத்தியால் பாதிப்படைந்து மன நிம்மதிக்காக தியான வகுப்பு சென்று வருகிறார். இதில் தினமும் பாண்டியன் தன் மனைவி மீது சந்தேகமடைந்து தகராறில் ஈடுபட்டு வந்தார். நேற்று முன்தினம் குடித்துவிட்டு வந்த பாண்டியன், மனைவியிடம் தகராறில் ஈடுபட்டார். தகராறு முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த பாண்டியன் மனைவி ரேவதியின் தலைமுடியை பிடித்து இழுத்து சுவற்றில் முட்டினார். இதில் காயமடைந்த ரேவதி இது குறித்து காந்தி மார்க்கெட் போலீசில் புகார் அளித்தார். வழக்குப்பதிந்த இன்ஸ்பெக்டர் உமாசங்கர் தலைமறைவான பாண்டியனை தேடி வருகிறார்.கொலை வழக்கில் ஜாமீனில் வந்தவர் சடலமாக மீட்பு: மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே தொப்பநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சுரேஷ் (35). அதே ஊரை சேர்ந்த முத்தன்(65) என்பவரை கல்லால் தாக்கி கொலை செய்ததாக கைது செய்யப்பட்டார். தற்போது ஜாமீனில் வெளிவந்து திருப்பூர் பனியன் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வந்தார். நேற்று திருச்சி செஷன்ஸ் கோர்ட்டில் கொலை வழக்கு சம்பந்தமாக ஆஜராக வேண்டியவர், கோர்ட்டிற்கு செல்லவில்லை. இந்நிலையில், தொப்பநாயக்கன்பட்டி அருகேயுள்ள கோமாளி ஆற்றோரம் உள்ள புங்கமரம் ஒன்றில் சுரேஷ் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதாக வையம்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு தூக்கில் சடலமாக தொங்கிய நிலையில் இருந்த சுரேசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories: