ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் உள்ளிருப்பு போராட்டம் பணிகள் கடும் பாதிப்பு

திருச்சி, ஜூலை 24: ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் ஊரக வளர்ச்சித்துறையில் எந்த பணியும் நேற்று நடைபெறவில்லை.தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் மற்றும் டிஎன்ஜிஏ மாநில தலைவரும், ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளருமான சுப்பிரமணியன் பணி ஓய்வு பெறும் நாளன்று திடீரென சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்நிலையில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில், ‘சுப்பிரமணியன் சஸ்பெண்ட் நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும். ஜாக்டோ ஜியோ போராட்டத்தின் போது பிறப்பிக்கப்பட்ட 17பி ஆணையை ரத்து செய்ய வேண்டும்’ என்பதை வலியுறுத்தி மாநிலம் தழுவிய அனைத்துத்துறை ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம் மற்றும் கையெழுத்து இயக்கம் நேற்று நடந்தது.திருச்சி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி–்துறையில் பணியாற்றும் 800 பேர் உள்ளிருப்பு பேராட்டத்தில் பங்கேற்றனர். மாவட்ட தலைவர் ஜாகிர்உசேன், மாநில துணைத்தலைவர் பழனியப்பன் ஆகியோர் தலைமையில் நடந்தது. இதனால் மாவட்டம் முழுவதும் உள்ள ஊரக வளர்ச்சித்துறையில் எந்த பணியும் நேற்று மேற்கொள்ளப்படவில்லை.

Related Stories: