ஓய்வு நாள் அன்றே பணப்பலன்களை வழங்க கோரி ஓய்வு போக்குவரத்து ஊழியர்கள் சங்கு ஊதி நூதன போராட்டம்

திருச்சி, ஜூலை 24: ஓய்வு நாளன்றே பணப்பலன்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்கள் நேற்று சங்கு ஊதி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள போக்குவரத்து மண்டல அலுவலகம் முன் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் நேற்று காலை செயலாளர் சண்முகம் தலைமையில் சங்கு ஊதி கோரிக்கைகளை விளக்கி கோஷமிட்டனர். தொடர்ந்து தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஓய்வு பெற்ற ஆண், பெண் ஊழியர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.தொழிலாளி ஓய்வு பெறும்போதே வருங்கால வைப்பு நிதி தொகை, பணிக்கொடை விடுப்பு சம்பளம், தொழிலாளியிடம் பிடிக்கப்பட்ட தொகை ஆகியவற்றை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 1-9-2010க்கு முன் ஓய்வு பெற்றோர் குடும்ப வாரிசுக்கு 15 சதவீதம் ஊதிய உயர்வு அரியர்ஸ் வழங்க வேண்டும். மருத்துவ தகுதியின்மையால் ஓய்வு பெற்றவர்களுக்கு பஸ் பாஸ் வழங்க வேண்டும். குடும்ப பென்சன்தாரர்களுக்கு பென்சன் அரியர்ஸ் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது..

Related Stories: