சர்வதேச விண்வெளி ஆய்வு கட்டுரை போட்டி பிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளி மாணவி மதி முதலிடம் நாசா பயணம் செல்வதற்கு தகுதி

பட்டுக்கோட்டை, ஜூலை 24: பட்டுக்கோட்டை அடுத்த புதுக்கோட்டைஉள்ளூர் பிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளியில் கோபார் குரு நிறுவனத்தால் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் பங்குபெறும் சர்வதேச விண்வெளி ஆய்வுக்கான கட்டுரை போட்டிகள் நடந்தது. பிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளி தாளாளர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். முதல்வர் ரகுபதி முன்னிலை வகித்தார்.போட்டியில் சர்வதேச விண்வெளி ஆய்வுக்கான கட்டுரை சமர்ப்பிக்கப்பட்டதில் இப்பள்ளியில் 9ம் வகுப்பு பயிலும் மாணவி மதி முதலிடத்தை பிடித்து சாதனை படைத்தார். இதன்மூலம் முதலிடம் பிடித்த மாணவி மதி, அமெரிக்கா புளோரிடா மகாணத்தில் உள்ள கென்னடி சர்வதேச விண்வெளி மைதானத்தில் சர்வதேச பள்ளிகள் பங்கேற்கும் விண்வெளி ஆய்வு மைய கட்டுரை போட்டியில் கலந்து கொள்ள இலவசமாக 1 வாரம் நாசா பயணம் செல்வதற்கு தகுதி பெற்றுள்ளார்.பயண செலவுகளை கோபார் குரு நிறுவனம் ஏற்று கொள்வதாக இயக்குனர் கோபர்குருகாயம்பு ராமலிங்கம் கூறியுள்ளார். நிகழ்ச்சியில் பட்டுக்கோட்டை டாக்டர் செல்லப்பன், பேராசிரியர் செய்யது அகமதுகபீர், நாமக்கல் பள்ளி முதல்வர் சண்முகம் பங்கேற்றனர். ஏற்பாடுகளை பள்ளி மேலாளர் சுப்பையன் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

Related Stories: