பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர வலியுறுத்தி சிஐடியூ ஆர்ப்பாட்டம்

தஞ்சை, ஜூலை 24: பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர வலியுறுத்தி தஞ்சை ரயிலடி முன் சிஐடியூ சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சிஐடியூ ஆட்டோ சங்க மாநகர செயலாளர் சுரேஷ் தலைமை வகித்தார். கவுரவ தலைவர் ஜெயராஜ், மாவட்ட பொருளாளர் ஜோதி, மாநகர தலைவர் ஷாநவாஸ், மாநகர துணை தலைவர் ஆறுமுகம் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ஜெயபால், மாவட்ட தலைவர் கோவிந்தராஜ், மாவட்ட பொருளாளர் கண்ணன், முறைசாரா சங்க மாவட்ட செயலாளர் பேர்நீதி ஆழ்வார், சிஐடியூ மாவட்ட துணை செயலாளர்கள் அன்பு, செங்குட்டுவன், டாஸ்மாக் சங்க மாவட்ட செயலாளர் வீரையன் கண்டன உரையாற்றினர்.ஆர்ப்பாட்டத்தில் மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும். மோட்டார் தொழிலை கார்ப்பரேட்டுக்கு தாரை வார்க்க கூடாது. மத்திய அரசின் தொழிலாளர் விரோத கொள்கைகளுக்கு துணை போக கூடாது. பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர வேண்டும். விஷம் போல் உயரும் வாகன இன்சூரன்ஸ் கட்டண உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். நலவாரிய பண பயன்களை முடக்காமல் விரைந்து வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் சிஐடியூ தொழிற்சங்கத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: