×

அரவக்குறிச்சியில் பிடிபட்ட விநோத ஆந்தை

அரவக்குறிச்சி, ஜூலை 24: அரவக்குறிச்சியில் ஆந்தை இனத்தைச் சேர்ந்த விநோத பறவையைப் பொதுமக்கள் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சந்தைப்பகுதியில் நேற்று விநோத உருவில் ஓர் பறவை காணப்பட்டது. பார்ப்பதற்கு ஆந்தை இனத்தைப் போல காணப்பட்டது. பறவையை பிடித்த அப்பகுதி பொதுமக்கள் இப்பறவையை எங்கு ஒப்படைப்பது எனப்புரியாமல் அரவக்குறிச்சி தீயணைப்புத் துறையினருக்கு நேரில் சென்று தகவல் அளித்தனர். ஆனால் அரவக்குறிச்சி தீயணைப்பு அலுவலரோ இவைகளையெல்லாம் பிடிப்பது, பாதுகாப்பது, ஒப்படைப்பது எங்கள் பணியல்ல. வனத்துறையினரிடம் ஒப்படையுங்கள் என்று கூறினர். பின்னர் அப்பறவையை திண்டுக்கல் வனத்துறையினரிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர். ரங்கமலையில் இருந்து அரிய வகை பறவை, விலங்கு ஆகியன அவ்வப்போது ஊருக்குள் வந்து விடுகின்றன என்று அப்பகுதி மக்கள் கூறினர்.

Tags :
× RELATED ஆத்ம நேச ஆஞ்சநேயர் கோயிலில் ராம நவமி விழா