உளுந்தூர்பேட்டையில் பெங்களூர் ரோஜா உள்ளிட்ட செடிகள் விற்பனை தீவிரம்

உளுந்தூர்பேட்டை, ஜூலை 24: சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் மையப்பகுதியாக இருப்பது உளுந்தூர்பேட்டை. உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையம் மட்டுமின்றி சென்னை ரோடு, டோல்கேட், சேலம் ரோடு உள்ளிட்ட முக்கிய இடங்களில் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி வெளி மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கும் சீசனுக்கு ஏற்றார் போல் பழங்கள், துணிகள், பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்வது வழக்கம். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக உளுந்தூர்பேட்டையில் பெங்களூர் ரோஜா செடிகள் விற்பனை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது குறித்து திருச்சியை சேர்ந்த சுசீலா என்ற பெண் கூறிய போது பெங்களூரில் இருந்து கொண்டு வரப்படும் ரோஜா செடிகள் அதிகமாக பூப்பதுடன், பூவும் பெரிதாக இருக்கும், இந்த செடியின் விலை ரூ 100ல் இருந்து ரூ 150 வரையில் விற்பனை செய்யப்படுகிறது. இதே போல் குண்டுமல்லி, சாமந்திப்பூ, கனகாம்பரம், குரோட்டன்ஸ் உள்ளிட்ட பல்வேறு வண்ண பூச்செடிகள் விற்பனை செய்யப்படுகிறது.தற்போது மழை காலம் என்பதால் செடி வைத்தால் நன்றாக வேர் பிடித்து பூக்கும் என கூறினார். இதன் காரணமாக உளுந்தூர்பேட்டை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானவர்கள் வாங்கி செல்கின்றனர்.

Advertising
Advertising

Related Stories: